அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில்

திண்டுக்கல் மாவட்டம் G.S. நகர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்

திண்டுக்கல் மாவட்டம் சீலப்படி கிராமம் G.S. நகர் 7வது தெருவில் அமைந்திருக்கும் திருத்தலத்தை G.S. நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து மன்மத வருடம் மாசி 22ஆம் நாள் 05/03/2016 அன்று பூமி பூஜை போடப்பட்டு திருப்பணிகள் துவங்கப்பட்டது.
அதன்பின் G.S.நகர்‌ மக்களை இனைத்து திருக்கோவிலுக்கு என்று தனி திருப்பணி குழு அமைத்து
திருப்பணிக்குழுவும் பொது மக்களும் இனைத்து பட்டி தொட்டி எங்கும் நிதி திரட்டி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் சீரும் சிறப்புமாக கட்டி முடிக்கப்பட்டது. 

திருக்கோவில் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்)
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் ஹேவிளம்பி வருடம் வைகாசி மாதம் 15ஆம் நாள் (29/05/2017) அன்று ஸ்ரீ செல்வ மகா கணபதிக்கும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்வாமி , ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு குடமுழுக்கு விழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்கோவிலின் சிறப்பு 

இச் சிறப்பு மிக்க திருத்தலத்தின் விக்ரகங்கள் மாமல்லபுரத்தில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இத்திருத்தலத்தின் சிறப்பை மேலும் சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீ காலபைரவர் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் ஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 20ஆம் நாள் (04/03/2021) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பின்னர் பரிகார நாகம் திருக்கோவிலின் தலவிருட்சமாக திகழும் அரசமரம் மற்றும் வேம்பு அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது

அதன்பின் சார்வரி வருடம் ஆவணி மாதம் 6ஆம் நாள்  (22/08/2020) அன்று அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் வளாகத்தில் தலவிருட்சமாக திகழும் அரசமரம் மற்றும் வேம்பு அடியில் சிறியதாக கணபதி விக்ரம் பரிகாரத்திற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மாதாந்திர சிறப்பு பூஜைகள்

G.S.நகர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் மாதம் தோறும் சங்கடஹரா சதுர்த்தி பூஜை ஸ்ரீ செல்வ மஹா கணபதிக்கு அபிஷேக அலங்காரங்களுடன் மிக சிறப்பாக நடைபெறுகிறது.

அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு மாதம் தோறும் பௌர்ணமி அன்று அபிஷேக அலங்காரங்களுடன் ‌பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அருள்மிகு ஸ்ரீ காலபைரவர்  ஸ்வாமிக்கு மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று அபிஷேக ஆராதனைகளுடன்‌ சிறப்பு பூஜைகள்
நடைபெற்று வருகிறது.




Comments